PerambalurDistrict.com

Login Here


Home
பெரம்பலூர் மாவட்டம் ஒரு பார்வை

பெரம்பலூர் மாவட்டம் - Perambalur District Mapபெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], இந்தியாவின் தமிழக மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் பெரம்பலூர். இம்மாவட்டம் சுமார் 1,752 சதுர.கி.மீ. பரவியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 4,93,646 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 66.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 5,64,511 பேர் உள்ளதாகவும், இதில் 2,81,436 ஆண்களும் 2,83,075 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள்,

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி, திருச்சிராபள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம் [Cuddalore District], தெற்கில் திருச்சிராபள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சிராபள்ளி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு, முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்தரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, தமிழக தேவையில், 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District] உற்பத்தி செய்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], சிறப்பு பொருளாதார மண்டலத்தை 5000 ஏக்கர் பரப்பளவில் [சுமார் 20 சதுர.கி.மீ] உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக் அனைத்து உயர் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதாக அமையும். இதற்கு SREI Infrastructure Finance Ltd, தமிழ்நாடு தெழில் முன்னேறாக் கழகத்துடன் [TIDCO] இனைந்து இதை உருவாக்கவுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை துறைமுகம், இரயில் நிலையம் மற்றும் திருச்சிராபள்ளி சர்வதேச விமான நிலையத்துடனும் இனைக்கப்படும். இப்போதெ, தேசியமையமாக்கப்பட்ட முன்னனி வங்கிகளாகிய,

* Axis Bank

* Bank of Baroda

* Canara Bank

* HDFC Bank

* ICICI Bank

* IOB [Indian Overseas Bank]

* SBI [State bank of India]

தங்களது கிளைகளை பெரம்பலூரி ஆரம்பித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 3 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Kunnam - குன்னம்

* Perambalur - பெரம்பலூர்

* Veppanthattai - வேப்பந்தட்டை

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றோன்று கிருஷ்னபுரத்திலும் உள்ளது.

 

Latest Info

Polls

PerambalurDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 1 guest online
 

Latest News

Latest Info